கைக்கு எட்டாத நிலாவாய் நீ.....அண்ணார்ந்து பார்த்த படியே நான்.............
காதலுக்கு கண் இல்லையா யார் சொன்ன??? எனக்கு உன் கண்களை பார்த்துதானே காதல் வந்தது.....
வலிக்காமல் சாக வேண்டுமா???? காதலித்து பார்.......
என்னையே நான் நேசிக்கிறேன்....... காரணம் உன்னை நான் காதலித்ததால்.....
ரத்தம் இல்லாமலே வலிக்கொடுக்கிறது உன் பிரிவு............. கத்தி இல்லாமலே இதயத்தை அறுத்தெடுக்கிறது உன் நினைவு.......
நான் சோர்ந்துபோகும் போது.....நீ கட்டியணைத்து ஆறுதல் கூறும்... அந்த தருணத்துக்காகவே தினம் தினம் சோர்ந்து போகிறேன் நான்......
நீ சிந்தும் புன்னகையில் உயிர் பெறுகிறது.... நான் எழுதும் உயிரில்லா கவிதைகள்.....
பசும்பால் கேன்களை கண்டு கண்ணீர் வடிக்கிறது.. பசியில் தளர்ந்து போன கன்று.....
எனக்கு பிடித்ததெல்லாம் பிடிக்காமல் போனது என்னவனுக்கு பிடிக்காததால்...
தொலைந்தது அனைத்தும் உன்னால் கிடைத்தது.... இப்போது நீயே தொலைந்து போனாய் என்னை விட்டு...... இனி நான் தொலைக்க வேறு என்ன இருக்கிறது.........
நீயும் எனக்கு கடவுள்லானாய்.......... காதல் வரம் கொடுத்து.....
எப்போதும் உன்னிடம் தோற்றுபோகவே விரும்புகிறேன்..... காரணம்....... என்னை ஆறுதல் படுத்த நீ கொடுக்கும் அந்த ஒற்றை முத்தத்திற்காக......
ஆதி காலத்து கோவலனை... நிகழ்காலத்தில் கண்டு விட்டேன் உன் உருவில்.....
என் கவிதைகள் என்னை கவிஞர் ஆக்கவேண்டாம்.... உன் காதலியாக்கினால் மட்டும் போதும்................
அன்பே மறுதேசத்தில் இருந்து நீங்கள் அனுப்பி வைத்த வாசனை திரவியம்.... ஈடாகவில்லை உங்கள் வியர்வை வாசத்துக்கு......
வழி மறந்தது நீ வலிக்கிறது எனக்கு..... வலிமை வேண்டும் உன்னை மறக்க....... வழியிருக்க சொல்...... வழிகிறது கண்ணீர்...
கண்கள் இருண்டது மூச்சு திணறியது இதயம் இரண்டானது புன்னகை அழுகையானது கனவுகள் மங்கியது எல்லாம் உன் பிரிவால்....... காணமல் போனது நீ மட்டும் மல்ல என் காதலும்தான்.......
வெட்டிவிடதான் நினைக்கிறேன் உன் நினைவுகளை .......... ஆனால் அது வளர்ந்து கொண்டே போகிறது என் நகங்களை போல....
காதல் கவிதை ஒன்றை யோசித்தேன் கற்பனையில் வந்தது உந்தன் பெயர் மட்டுமே........ அதையே எழுத நினைத்தேன் ஆனால் மற்றவர்களும் உன்னை கற்பனையில் கண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் பூட்டி வைத்து விட்டேன் என் இதயத்தில் உன் பெயரை............
என் பேனா முனையும் என் தமிழையும் நெருக்கப்படுதியது நீதான்......
உன்னுள் என்னை தேடி தேடியே களைத்துப்போகிறேன் நான்....................
உன்னை கனவிலாவது சந்திக்கலாம் என்றால்........ உன் நினைவுகள் என்னை உறங்க விடமறுக்கிறது............
முதன் முறையாக நீ என்னை அணைத்தபோது ...... நான் உடுத்திருந்த புது சேலையில்.....இன்னும் உன் வாசம் இருக்கவே செய்கிறது....மறுபடியும் அதை உடுத்தும்போது அந்த நாளும் மனசும் விஷேசமாகிறது உன் அணைப்பை எண்ணி.......
நமது சந்திப்பில் சல்லாபம் கொள்கிறது... காற்றும் .....காதலும்......
நீ கேட்ட வார்த்தையே பேசியதில்லையாம்..... இப்பொழுதுதான் தெரிகிறது அந்த வார்த்தைகள் ஏன் கெட்டன என்று.....
காதலிக்கிறேன் ... நிச்சயம் கை பிடிப்பேன் என்றான்..... சொன்னபடியே செய்தான் காதலித்தது என்னை கை பிடித்தது அவளை....
எல்லா சொற்களும் தீர்ந்துவிட்டது..... உன் புன்னகையை கொஞ்சம் தா கவிதை எழுத.......
உன்னை நினைத்து காணும் கனவு கூட அழகாக இருக்கிறது உன் இதழை போல.........
உன் ஒரு நொடி மௌனத்தை கடக்க ஒரு யுகத்தையே கடந்த பிரமை.....
தினம் தினம் மழை பெய்தாலும் அதை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்..... உன்னை ரசிப்பது போலவே.....
காதல் அழகான ஒரு சொர்க்கம்.... அதன் வலியை அறியாதவரை...........
எல்லோரையும் விரட்டுவது போலத்தான் என்னையும் விரட்டுகிறது வறுமை....... நாடு விட்டு நாடு வந்த போதுதான் தெரிந்தது தனிமையின் கொடுமை...... வீட்டில் இருந்து கிளம்பும் போது அம்மா கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் என் கன்னத்தில்......... கை காட்டி பிரியும் தருணத்தில்.... உடன்பிறந்தோரின் கண்ணீரில் கனக்கிறது மனம்..... மீண்டும் உயிரோடு ஒருவர் ஒருவரை சந்திக்கும் வரை.... உயிற்ற கடிதமே நமக்கு ஆறுதல்..... போய் வருகிறேன்.....
உன்னோடு பேசிய வார்த்தையும்.... பேச போகும் வார்த்தையும் 100 முறை ஒத்திகை காண்கிறது எனக்குள்.....
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயக்கப்படுகிறதாம்............ ஆனால் நம் திருமணம் மட்டும் உன் காந்த பார்வையால் நிச்சயக்கப்பட்டது............
நான் புகைப்பிடிப்பதையே நிறுத்திவிட்டேன்......... காரணம்........... புகைப்பிடிப்பதால் இதயத்தில் ஓட்டை விழுந்தது அதன் வலி நீ வெளியேரிவிட்டால்...............
வார்த்தைகள் காயப்படுத்தும் ஆனால் மௌனம் கொலைசெய்யும்.....
கால்கள் களைத்து போனாலும்..... மனம் இன்னும் உன்னை தேடி கொண்டுதான் இருக்கிறது...
காதலும் சிகரெட்டும் ஒன்றுதான்....உதட்டோடு உறவாடி விட்டு இதயத்தை புண்ணாக்கி விடும்...
என்னில் உன் நினைவுகள் இல்லை.... உன் நினைவுகளில்தான் நான் உள்ளேன்.
நான் உன்னை என் எதிரில் பார்த்ததை விட..... உன்னை..... எதிர் பார்த்த நாட்களே அதிகம்......
மழையில் நனைந்த என்னவளின் அழகைக் கண்டு தலை கவிழ்ந்தது வானவில்......
நீ கோவிலுக்கு வரும் அழகை காண்பதற்க்காகவே சிலைகள் கோபுரத்துக்கு மேல் காத்துக் கிடக்கின்றன ..
எந்த மொழி கவிதையை படித்தாலும்...... உடனே துளிர் விடுகிறது உந்தன் இனிய நினைவுகள்.......
என் காதலை உன்னிடம் மறைத்தைப்போல.... இன்றும் மறைத்து வைத்திருக்கிறேன் உன்பெயரை...... என் முகநூலின் password ஆக.......
மறந்து விடாதே..... இறந்து விடுவேன்......
ஒவ்வொரு சுவாசத்திக்கும் வலிமை சேர்க்கிறது உன் நினைவுகள்.......
வலி இல்லாமல் ரத்தம் இல்லாமல் கத்தி இல்லாமல் சிகிச்சை இல்லாமல் இதய மாற்றம் காதல்......
ஒற்றை சொல் கவிதை காதல்...... அந்த கவிதைக்கு ஒற்றை அர்த்தம் நீ,,,,,,,,,,,,,,,,,,,,,,
தேடி கொண்டேருக்கிறேன்..... உன்னுள் தொலைந்த என்னை.....
உறுதியாக தெரியவில்லை நீ என்னை நினைக்கிறாயா என்று...... ஆனால் உன்னையே என் உயிராக எண்ணி உலாவிகொண்டிருக்கிறேன்......
எழுதி முடிக்கவே முடியாத கவிதை அவன்....... அந்த கவிக்கவே உயிர் வாழும்... பேதை நான்............
என்னை விட்டு நீ வெகுதூரம் சென்றாலும்...... உன் நினைவுகள் என்றென்றும்..... என் விழிகளில் வாழ்ந்துகொண்டே இருக்கும்.......
மகிழ்ச்சியின் வறுமைக்கு பசுமை சேர்க்கிறது உந்தன் நினைவுகள்....
நமக்குள் இனி ஒன்றும் இல்லை என்றாய்............ ஆனால் இருந்துக்கொண்டே இருக்கிறது உன் நினைவுகள் என்னுள்
நீயும் நிலவும் கைக்கு எட்டாத தூரத்தில்......வலிக்கிறது மனம்.....வந்துவிடு காத்திருக்கிறேன்..தூரத்தில் உன்னை காண்பது ரணமாக இருக்கிறது....நீ எனக்குரியவன் என்ற நம்பிக்கையில் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்............வருவாயா????????? Miss u alot...........