Friday, 24 August 2012

அவன் விழிகளைக் கண்டவுடன்தான் 
என் கற்பனை கடல் அலமோத 
ஆரம்பித்தது.........
சலிப்பூட்டும் உலகில் 
களிப்பூட்டும் அவனும் கனி இதழ் 
அவன் இதழ்களில் தேங்கிக்கிடக்கும்
கோடான கோடி முத்தங்கள்.....
அனுதினமும் காத்திருக்கிறேன்
அவன் விழிகளின் அழைப்பிற்காக................

எங்கு பிரிந்தோம் ..?
அங்கு சேர்ந்தோம் ...

எதை தொலைத்தோம் ..?
அதை வசம் கொண்டோம் ...

அன்று மறந்தோம் ..?
இன்று தொடர்கிறோம் ...

தப்பா..!!??
தவறா ..!!??
என யோசிக்கும் நம் மனம் மறவா...!

உடன்படும் இல்லை..
இடைபாடும் இல்லை - நம்மில்

வா......!

தூரம் தெரியும் வரை
சேர்ந்து நடப்போம்...
தூரமாக நம் காதல்..!!!
கட்டி அணைத்து
சாரி சொல்லும் 
உன்னிடம்.....
எத்தனை முறை 
வேண்டுமானாலும்
கோபம் கொள்ள 
நான் தயார்..........