Monday, 19 September 2011

என்னை கொள்ளாமல் கொள்ளும்
அரக்கனே.......நித்தமும் நித்திய
ஜீவனாய் வாழ்கிறேன் உன்னோடு......
மீன் துடிக்கிறது நீருக்காக
நான் துடிக்கிறேன் உனக்காக
படைதவனை கண்டால் கேட்பேன்
இருவரம்....... மறக்க ஒரு மனம் கொடு
இல்லையேல் மரணிக்க ஒரு
வாய்ப்பு கொடு.........

Saturday, 17 September 2011

என் மனதை முக்குளிக்க
வைக்கிறேன்......
அது திமிறிக்கொண்டு வெளியேறுகிறது
உன் கால் அடி ஸ்பரிசத்துக்காக...............

Thursday, 15 September 2011

கனவுகளை சுமந்தபடி
என்னை கண்பதக்காக
கால்கடுக்க காத்திருந்துவிட்டு
என்னை காணமல் திரும்பி இருக்கிறாய்
நீ..................
உன் கால் சுவடுகளில்
நீ சிந்திய கண்ணீரும்
உயிர்துளிகளையும் கண்டு
மனம் வெம்பி கொண்டிருக்கிறேன்   
நான்...............

Wednesday, 14 September 2011

உன் நினைவுகளை வெட்டிவிடதான்
நினைக்கிறேன்.......
ஆனால் அது வளர்ந்து கொண்டே போகிறது
என் நகங்களை போலவே.....

Monday, 12 September 2011

உன்னை நினைத்து வாடியது
போதும்......... உன் நினைவால்
ஒவ்வொரு விடியலும் நரகமானதும்  
போதும்...... உன்னால் நான் அழுததும்
போதும்......உன்னால் நான் இழந்ததும்
போதும்........ உனது முத்தங்களும்
போதும்...... நான் பட்ட கஷ்டங்களும்
போதும்...... போதும்மட போதும்மட
உன்னால் நான் வாழ்ந்த இந்த நரக
வாழ்க்கை இந்த ஜென்மத்தில் எனக்கு போதும்மட........

Saturday, 10 September 2011

இந்த எந்திர வாழ்கையில்
தொலைகாட்சி  பிம்பங்கள் இடைய 
தொலைந்துப்போன  உன் முகத்தை
தேடுகிறேன் நான்....
மீண்டும் நாம் சந்திக்கும் வரை
உன் நினைவுகள் என் தோள் சாயும்போதுதான்
சற்று இளைப்பாறுகிறது என் மனம்.......
சிந்திய கண்ணீர் துளிகளை
துடைத்து கொண்டு விரைகிறேன்
மீண்டும் என் எந்திர வாழ்க்கைக்கு............... 

Thursday, 8 September 2011

அசுத்தம் ஆவதக்கே 
மீண்டும் மீண்டும்
குளித்து தயாராகிறாள்
விபசாரி...........

Monday, 5 September 2011

துளிகள்

வரம்
நீ எனக்கு கிடைத்தது

சாபம்
நீ இல்லாமல் வாழ்வது

சிற்றின்பம்
உன்னை நினைத்துக்கொண்டு வாழ்வது

பேரின்பம்
உன்னோடு வாழ்வது

சொர்க்கம்
உனது கொஞ்சல்
நரகம்
உனது மௌனம்

Sunday, 4 September 2011

தோழா.......நாம் இருவரும் எடுத்துக்கொண்ட
புகைபடத்தில் நீ அழகாக  சிரிக்கின்றாய்.......
ஆனால் ஊருக்கு தெரியாமல் என்
மனைவியோடு நீ எடுத்துக்கொண்ட
புகைப்படம் சிரிப்பாய் சிரிக்கிறது
தெருவோர டீக்கடைகளில்..............

Saturday, 3 September 2011

உன் வீட்டு   வாசலில்
மரமாக காத்திருக்கிறேன்
சற்று இளைப்பாறிவிட்டு போ
என் ஆன்மாவது
சாந்தியடையட்டும்.........

Thursday, 1 September 2011

தாய் கண்ணீர் வடிக்க.........
கள்ளி பாலோடு தந்தை
சிரிக்க ........
கள்ளகபடு இல்லாமல் புன்னகைக்கிறது
பெண் சிசு........
நான் சாய்ந்த தூணில்
நீ சாய்ந்த போது
தெரிந்துக்கொண்டேன்
காதல் தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்கும்.......
நான் சந்தித்த ஒரே யுத்தம்
உன் மௌனம்தான்.......
தொடராதே........
பலியாவது  நான் மட்டும்மல்ல
பாழைப்போன என் காதலும் தான்........
நித்தம் நித்தம் ஏமாற்றம்
நித்திரையிலும் ஏமாற்றம்
கண்களுக்கு உறக்கமில்லை
கனவுகளும் தோன்றவில்லை
பணத்துக்கு பஞ்சம்மில்லை
பாசங்காட்ட மனிதரில்லை
இறைவனிடம் கெஞ்சுகிறேன்
அவனோ  வஞ்சிக்கிறான்...........
பலருக்கு இன்பமூட்டி தன்னைதானே
அழித்துக்கொள்ளும் விதவை..........
-வெண்சுருட்டு-