Thursday, 26 January 2012

இன்று இறுதி நாள் 
இனி உங்கள் வாழ்வில் வரமாட்டேன்
புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் 
உங்கள் மனதில் இருந்தும் என்னை 
அழித்து விடுங்கள்.....
உங்களால் நான் பட்ட துன்பங்கள் போதும் 
என்னால் நீங்க பட்ட கஷ்டங்களும் போதும்
என்னை விட்டு விடுங்கள் 
நான் போகிறேன்...
உங்கள் புதிய நண்பரோடு 
மகிழ்சியாக வாழ முழு மனதோடு
வாழ்த்துகிறேன்.....
என்றும் அன்புடன் 2011 !!!!
பிரம்மனின் கவனக் 
குறைவு- அரவாணிகள்!

இமை.....
இலவச காவலாளி

பிறருக்கு வெளிச்சம் 
மூட்டி தன்னை தனே 
கருக்கி கொள்ளும் 
தியாகி- மெழுகுவர்த்தி

மனிதனின் மூன்றாம்
கரம்- கணினி

படிக்காமலே பத்திரபடுத்திய
காதல் காவியம் - முதிர்க்கன்னி

அனைவரையும் தாக்கும்
வைரஸ் - காதல்
கொஞ்சி....
கெஞ்சி.....
முத்தமிட்டு.....
ஆசை வார்த்தைகள் பேசி...
கேட்டு....
வாழ்க்கையை தீர்மானித்து....
குழந்தைகளுக்கு பெயர்
வைத்து...... 
ம்ம்ம்ம் என்ன புண்ணியம்?
அவசரத்துக்கு தொட 
முடியவில்லையே உன்னை.... முகநூல் காதல்...
காதலுக்கு கண் இல்லையா 
யார் சொன்ன???
எனக்கு உன் கண்களை 
பார்த்துதானே காதல் 
வந்தது.....
வலிக்காமல் சாக
வேண்டுமா????
காதலித்து பார்.......
என்னையே நான் 
நேசிக்கிறேன்.......
காரணம் உன்னை 
நான் காதலித்ததால்.....
ரத்தம் இல்லாமலே 
வலிக்கொடுக்கிறது
உன் பிரிவு.............
கத்தி இல்லாமலே 
இதயத்தை 
அறுத்தெடுக்கிறது 
உன் நினைவு.......
நான் சோர்ந்துபோகும்
போது.....நீ கட்டியணைத்து 
ஆறுதல் கூறும்...
அந்த தருணத்துக்காகவே 
தினம் தினம் சோர்ந்து போகிறேன் 
நான்......
நீ சிந்தும் புன்னகையில் 
உயிர் பெறுகிறது....
நான் எழுதும் 
உயிரில்லா கவிதைகள்.....
பசும்பால் கேன்களை 
கண்டு கண்ணீர்
வடிக்கிறது..
பசியில் தளர்ந்து 
போன கன்று.....
எனக்கு பிடித்ததெல்லாம் 
பிடிக்காமல் போனது 
என்னவனுக்கு 
பிடிக்காததால்.......
தொலைந்தது அனைத்தும் 
உன்னால் கிடைத்தது....
இப்போது நீயே
தொலைந்து போனாய் 
என்னை விட்டு......
இனி நான் தொலைக்க 
வேறு என்ன இருக்கிறது.........
நீயும் எனக்கு 
கடவுள்லானாய்..........
காதல் வரம் 
கொடுத்து.....
எப்போதும் உன்னிடம்
தோற்றுபோகவே விரும்புகிறேன்.....
காரணம்.......
என்னை ஆறுதல் படுத்த 
நீ கொடுக்கும் அந்த 
ஒற்றை முத்தத்திற்காக......
ஆதி காலத்து 
கோவலனை...
நிகழ்காலத்தில் 
கண்டு விட்டேன் 
உன் உருவில்.....
என் கவிதைகள்
என்னை கவிஞர் 
ஆக்கவேண்டாம்....
உன் காதலியாக்கினால்
மட்டும் போதும்................
அன்பே மறுதேசத்தில் இருந்து 
நீங்கள் 
அனுப்பி வைத்த 
வாசனை திரவியம்....
ஈடாகவில்லை 
உங்கள் வியர்வை
வாசத்துக்கு......