Wednesday, 12 October 2011

எதிரும் புதிருமாய்
அமர்ந்தபடி நாம்
பேசிய கதைகள்
கவிதைகள் எல்லாம்
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.......
தொலைபேசி வழி
நலம் விசாரித்து
ஆறுதல் கூறி
சமாதனம் ஆன
நாட்களையும் தொலைக்க வேண்டியதாகிவிட்டது......
அங்கும் இங்குமாய் ஒட்டி
கொண்டிருந்த உன் நினைவுகளையும்
குருதி கொட்ட கொட்ட வெட்டி
பிரியவிடையும் கொடுத்து விட்டேன்........
இனி
வாழ்க நீ வாழ்க உன் புதிய காதல்......

Saturday, 8 October 2011

திருமணம்

நல்ல இடம்
தட்டி கழிக்காதே -அப்பா
உனக்கு பின்
இரு தங்கைகள் மறந்துவிடாதே -அம்மா
நல்ல சம்பளம்
நல்ல உத்தியோகம் ஒத்துக்கொள்- அண்ணன்
என் வேலைக்கு
அவரிடம் சிபாரிசு செய் -தம்பி
மாமா நல்ல அழகு -தங்கைகள்
ஆனால் நான் இன்னும் சொல்வே இல்லை
என் நினைவில் வாழ்வது
வேறு ஒருவன் என்று.........
நீ என்னுடன் இருந்தபோது
என் கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையாக பிரகாசித்தன.......
நீ என்னுடன் இல்லாதபோது
என் கவிதைகள் எல்லாம்
வெறும் கிறுக்கல்களாக கூட
சுவாசிக்கவில்லை........
நீ என்னை பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகள் நிலையாக
இருக்கும் என் கண்களில்
கனவாக அல்ல கண்ணீராக.........
உறக்கம் மறந்து
உறங்க மறந்து வெகு நாட்கள் ஆனதட......
மொத்தமாய் நீ என்னை அள்ளி செல்ல
பித்து பிடித்து போனேன்ட......
ஊமையாய் ஊனமாய் உன்னை
சுமந்துகொண்டே திரிகிறேன் நான்.....
சென்ற நவராத்திரியை
ஒரு இனிப்பை போல்
சுவைத்து மகிழ்தோம் இருவரும்.
இந்த நவராத்திரியில் தனியாக
நிற்கிறேன் கொலு பொம்மையை போல்.......
மீண்டும் மீண்டும்
என்னை காயப்படுத்த
முயற்சிக்காதே..........
உன்னால் நான் இறந்து
வெகுநாட்கள் ஆகிவிட்டது........