Tuesday, 30 August 2011

DIANA...........

ஆண் பெண் என்று பாராமல்
எல்லோர் இதயத்திலும்  பச்சை கிளியாக
வலம் வந்த நீ  பலருடன் கிசுகிசுக்கப்பட்டாய்!
பரவாயில்லை மறுமணம் புரிந்துக்கொண்டு
புதிய வசந்ததோடு வாழ பிரதித்தபோது
இரக்கமில்லா எமன் உன்னை சொந்தமாக்கி
கொண்டானே....... பச்சை கிளியே எங்கே
பறந்து போனாயோ???????
உலர்ந்து போன உன் நினைவுகள்
இன்னும் என்  கன்னத்தை
ஈரப்படுதுவது  என்ன நியாயம்?????
நான் புகைப்பதையே நிறுத்திவிட்டேன்
காரணம் புகைப்பதால் இதயத்தில்   
ஓட்டை விழுந்து அதன் வலி
நீ வெளியேறி விட்டால்??????
சந்தித்து கொள்ளாமல்
தொட்டு கொள்ளாமல்
விலகி கொள்ளாமல்
தொடர்கிறது உன் இனிய
நினைவுகள்........
கண்டதும் காதலில் நம்பிக்கை
இல்லாத எனக்கு உன் விழிகளை
கண்டதும் வந்தது காதல்.......
என் பெயரை நீ உச்சரிக்காததால்
அது எனக்கு கெட்ட வார்த்தையானது......
நான் என் கவிதைகளில் தேடுவது
உன்னையா இல்லை என் காதலையா?
புரியவைக்க  நீ என் வசம் இல்லை
புரிந்துக்கொள்ள நான் இனி
உன்னவளும் இல்லை ......
உன்னுள் என்னை தேடி தேடியே களைத்து
போகிறேன் நான்  எப்போது புரிந்து
கொள்ள போகிறாய் என்னை.......
உன்னை நினைத்து நினைத்து களைத்து
போன நான் உன்னை மறக்க தூங்கினேன்
கனவிலும் நீ..........
கண்ணீர் கூட சுகமாகிறது
உன்னை நினைத்து அழும்போது .......
காதல்  காற்று இரண்டுமே மூன்று
எழுத்து ஒன்னு வாழவைக்கும்
ஒன்னு சகாடிக்கும் ......
பிறக்கும் போது அறியாத வலியும்
இறக்கும் போது தெரியாத  வலியும்
நீ என்னை பிரிந்த போது தெரிந்துக்கொண்டேன்.....
உன்னை நினைக்கையில் வலிக்கிறது
உயிர்........
உன்னை மறக்கையில்  பிரிகிறது
என் ஜீவன் ... நான் என்ன செய்வேன் .....
உறங்க மனமில்லை நினைவில் நீ
விழிக்க மனமில்லை கனவிலும் நீ .........
நீ இல்லையின்னு ஆனபோது
நான் இருந்தும் இல்லாமல் போனேன்
கண் மூடி காத்திருக்கிறேன்
கனவிலாவது நீ வருவாய் என!   

Monday, 29 August 2011

நிழல்களை நம்பி நிஜங்களை கைவிட்டேன்
வாழ்கையே கானல் நீர் ஆனது...............
என்னில் கலந்தவளே..
இன்னும் நீ என் வசம்தான்..

உன்னக்காக மட்டும்
உன்னில் நான் இன்னுமும் சுவாசிக்கிறேன்..
...
மறக்க முடியவில்லை.. இதை
மறுக்க முடியாது..

யாரும் அறியாமல்
உன் ஆதரவாய் நான்னும்..
என் ஆறுதலாய் நீயும்..

என்னக்காக என்னில் சுவாசிக்கும்..
உனக்கு....
இன்று பிறந்தநாள்..
என்னக்காக நீ பிறந்ததால்
இன்று இது இனிய நாள்..!!

வாழ்க வாழ்க. வளமுடன்...!
வாழ்த்துகளுடன் உன்னக்காக
உன்னில் வாழ்பவன்...!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!
நீ எனக்கில்லைன்னு ஆனபோது
சுவாசம் கூட சுமையானது.........
உன் முகம் அழகு நிலவு
உன் சிரிப்பு மின்னும் நட்சத்திரம்
உன் கூந்தல் கலைந்த கரு மேகம் .....
இப்படி வர்ணிப்பதலோ என்னவோ
வானத்தை போலவே நீயும்
என்னை விட்டு தூரமாவே இருக்கிறாய்..........

Saturday, 27 August 2011

அனுதினமும் உன் நினைவுகள்
என் இதயத்தை உரசி
ரத்தம் கசிய வைக்கிறது.......
மதுவே உன்னை தொடுகிறேன்
நான் தொட்ட மாதுவை மறக்க முடியாமல்.........
நான் பார்த்த போது நீ பார்க்கவில்லை என்னை
நீ பார்த்த போது நான் பார்க்கவில்லை உன்னை
ஆனால் நாம் இருவரும் பார்த்து கொண்டதை
உன் கணவனும் என் மனைவியும் பார்த்துக்கொண்டே
இருந்தார்கள் .................
அர்சனைக்கு தயாராவோம் என் பழைய காதலியே..............

Thursday, 11 August 2011

தோழா....... தொலைந்து போன என் நினைவுகளை
திருப்பி தந்தவன் நீதான் ............ஆனால் நான்
மீண்டும் தொலைத்து விட்டேன்....... இப்போது
தொலைத்து என் நினைவுகளை அல்ல.......
உன்னையும் என் நட்பையும் தான்..............!

Monday, 8 August 2011

இந்த பதிவுகள் உனக்காக
உனக்காக மட்டுமே......
என்னில் நீ மட்டுமே........இதை உணராமல்
offline நில் நீ இருந்து வெறும் like
மட்டுமே click செய்வதால் unlike ஆகிறேன்
நான் ...........
நான் அழகை பார்த்து பிரமித்து இருக்கிறேன்
ஆனால் என்னை நட்பால் பிரமிக்க வைத்தவன்
என் தோழன்தான்.........
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
ஒரு சதுரங்கதுக்குள் பழகிப்போன (fb )
முகம்மானோம் ..........ரத்த உறவு இன்றி
எந்த பிறவி சம்மதம் இன்றி
உனக்காக நான் துடிப்பதும்
என்னக்காக நீ துடிப்பதுதான் நட்பு.......

Saturday, 6 August 2011

தாய்க்கு  கொள்ளிவைக்க தலைப்புள்ள
வேணும்மின்னு சாஸ்திரம் சொல்லுமையா.....
உயர்ந்த சாதி பொண்ணை காதலித்த என்
ராசாவே. உன் பொன் உடலுக்கு.....
கொள்ளி வைக்க இந்த சாதி சொல்லுதையா
சாதிக்கு கொள்ளி வைக்க யார் வருவார்?
நீதிய யார் சொல்லி வைப்பார்......?

Wednesday, 3 August 2011

இன்று நானும் என் காதலனும்
பூக்களினால் அலங்கரிக்க பட்டு இருக்கிறோம் ............
அவன் அவனின் மனைவியுடன் மணவறையில்......
நான் என் காதலுடன் கல்லறையில்...................
நீ உன்னை மறந்து..
நான் என்னை அறியாமல்.

நம் சந்திப்பில்.....
நம்மை மீறி,
...சூழ்நிலையை தாண்டி..
உறவுகளை கடந்து..

நம் விழிகளில் திரண்ட
கண்ணீர் துளிகள்..
அணை மீறியதில்...

நான் சொன்ன..
நீ சொல்ல மறந்த..

பட்டுபோன என் காதல்
வேர்கள் ஈரபடுகின்றன..!
நம் காதல் இன்னும் எனக்கு....நிகழ்காலமே.....
ஆனால் உனக்கு அது இறந்த காலம்
எனக்கு நீதான் நிஜம்......
நீ மட்டுமே நிஜம்.......
ஆனால் நான் உனக்கு........
வெறும் ஜடம் வெறுமையை ஒரு ஜடம்........
அன்று
உன்னால் நிராகரிக்கபட்டவன் நான் ......
இன்று
மீண்டும் உன் வாசலில் ............
காரணங்கள் கேட்டு அல்ல ......
உன் "நிழல்" மட்டும்மே வேண்டி ....!!