மழையில் ஒரே குடையில் நடக்க ஆசை....... உன் தோள் சாய்ந்து கதைகள் பேச ஆசை...... உன் விரல் பிடித்து வலம் வர ஆசை...... நம் சண்டைக்கு பிறகு சமாதான முத்தம் பெற ஆசை..... உன் காதல் மொழி கேக்க ஆசை...... நான் வாழும் வரை உன்னுடன் வாழ ஆசையோ ஆசை......
எப்போதும் பேசும்
சுடும் வார்த்தைகளை விட
மனதுக்கு பிடித்தவர்கள்
காட்டும் மௌனம்
கனமாய் கனக்கிறது
இதயத்தில்.......
உன்னை காதலிப்பது போலவே எனக்கு வரும் கனவுகளையும் காதலிக்கிறேன்..... காரணம்...... அந்த கனவில் நீ வருவதால்.....
நீ கொடுத்த கவிதை இன்னும் இனித்துக் கொண்டே இருக்கிறது என் இதழ்களில்.......
நான் உறங்கினாலும் விழித்துக் கொண்டே இருக்கிறது உன் நினைவுகள் என்னுள்....